நரேந்திர மோடி சவாலாக இருப்பார் – ப.சிதம்பரம்

நரேந்திர மோடி சவாலாக இருப்பார் – ப.சிதம்பரம்

நரேந்திர மோடி சவாலாக இருப்பார் – ப.சிதம்பரம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 8:08 pm

ஆளும் காங்கிரஸ் கட்சியிக்கு இந்திய எதிர்கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சவாலாக இருப்பார் என மத்திய நிதியமமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி குறித்து தாம் அசட்டையாக இருக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ப.சிதம்பரம் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் தனிப்பட்ட ரீதியில் அவரின் சிந்தனைகள், தத்துவங்கள் மற்றும் பொதுப் பேரணிகளின் போது அவர் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளையே அவர் வழங்குவதாக குறிப்பிட்ட இந்திய நிதியமமைச்சர், முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்