தொலைநோக்குடன் செயற்படுவதன் மூலம் இலக்குகளை வெற்றிகொள்ள முடியும் – ஜனாதிபதி

தொலைநோக்குடன் செயற்படுவதன் மூலம் இலக்குகளை வெற்றிகொள்ள முடியும் – ஜனாதிபதி

தொலைநோக்குடன் செயற்படுவதன் மூலம் இலக்குகளை வெற்றிகொள்ள முடியும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 1:55 pm

, ,
பொதுநலவாய இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனுபுர சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்தில் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற கோலாகலமான ஆரம்பவிழாவில்  பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்
இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொறுமையுடனும் , தொலைநோக்குடனும் செயற்படுவதன் மூலம் இலக்குகளை வெற்றிகொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.
இளைஞர்களுக்காக இன்று செலவிடுப்படும் நிதி   எதிர்காலத்திற்கனா முதலீடு என்பதால் அவர்களுக்கு அதிக சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யுத்த சூழலால்  நீண்டகாலமாக இலங்கையின் இளம் சந்ததியினர் பல்வேறு சந்தர்ப்பங்களை தவறவிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஸ கூறியுள்ளார்
இதேவேளை, இன்று ஆரம்பமான இளைஞர் மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அங்கு உரையாற்றுகையில், உலகம் துரித மாற்றத்தை அடைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு அமைய  இளைஞர்களும்  மாற்றமடைய வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.
இன்னும் 2 வருடங்களுக்குள் மிலேனிய இலக்குகளை அடைவதற்கு ஏதுவாக பொதுநலவாய நாடுகள் செயற்பட வேண்டும் எனவும் கமலேஷ் சர்மா வலியுறுத்தியுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் இன பல்வகைமைக்கடு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் மக்கள் மன்ற மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி கோட்டையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
14 ஆம் திகதி வரை இந்த மாநாட்டு ஹிக்கடுவையில் நடைபெறவுள்ளதுடன்  சுமார் 500 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்