தனியார் பஸ் ஊழியர்களிடம் கப்பம் பெற்றுவந்த ஒருவர் கைது

தனியார் பஸ் ஊழியர்களிடம் கப்பம் பெற்றுவந்த ஒருவர் கைது

தனியார் பஸ் ஊழியர்களிடம் கப்பம் பெற்றுவந்த ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 2:09 pm

தனியார் பஸ் ஊழியர்களிடம் கப்பம் பெற்றுவந்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீண்டகாலமாக பஸ் ஊழியர்களிடம் கப்பம் பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய அனுராதபுரத்தில் இருந்து கொழும்பை நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் ஊழியர்களிடம் கப்பம் பெற முயன்றபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தைச் சேர்ந்த 28 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்