காணாமல் போயிருந்த சிறார்களில் ஒருவர் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த சிறார்களில் ஒருவர் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த சிறார்களில் ஒருவர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 7:51 pm

காலி – கிங்கங்கையில் நீராடச் சென்று காணாமல் போன இரண்டு சிறார்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று இளைஞர்கள் இன்று பகல் நீராடச் சென்றுள்ளதுடன், அவர்கள் மூவரும் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் ஒருவர் மாத்திரம் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனைய இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போனவர்களில் ஒருவரது சடலத்தை மீட்டுள்ளதுடன், மற்றைய இளைஞரை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்