ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் பஸ் சேவை வழமைக்குத் திரும்பும்

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் பஸ் சேவை வழமைக்குத் திரும்பும்

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் பஸ் சேவை வழமைக்குத் திரும்பும்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 9:44 pm


பண்டாரவளை – பூனாகலை நகரங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பண்டார​வளையிலிருந்து பூனாகலையை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கடந்த 4ஆம் திகதி விபத்துக்குள்ளாகியதில், 10 பேரின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் பலர் பதுளை மற்றும் தியதலாவை ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து இடம்பெற்று இன்றுடன் 6 நாட்கள் கடந்த போதிலும், பண்டாரவளை மற்றும் பூனாகலை ஆகிய நகரங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற நாளில் இருந்து இன்று வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரதேச மக்கள் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்துள்ளனர்.
பூனாகலையிலிருந்து பண்டாரவளை நோக்கி அதிகாலை 6 மற்றும் 6.20க்கு பயணத்தை ஆரம்பிக்கும் பஸ் சேவைகளும்,  பண்டாரவளையிலிருந்து பூனாகலையை நோக்கி மாலை 7 மற்றும் 7.20க்கு பயணத்தை ஆரம்பிக்கும் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பூனாகலை நகரிலிருந்து பண்டாரவளையை ​நோக்கி அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் இடம்பெறுகின்ற இறுதி பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள், என சகல தரப்பினரும் பலதரப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
கடந்த 4 ஆம் திகதி பண்டாரவளையிலிருந்து பூனாகலையை நோக்கி பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதை அடுத்து, தமது ஊழியர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக பண்டாரவளை டிப்போவின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசவாசிகள் தமது டிப்போ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பட்சத்தில், வழமை போன்று மீண்டும் குறித்த  பஸ் சேவைகளை ஆரம்பிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் நியூஸ்பெஸ்ட்டிற்கு கூறியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்