உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும்

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும்

உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் திட்டமிட்டவாறு நடைபெறும்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 3:34 pm

2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் திகதிகள் மாற்றப்படமாட்டாது என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்த போட்டிகள் 2022 நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களுக்கு போட்டிகளை பிற்போடுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என சம்மேளனம் தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக விளையாட்டு வீரர்களும்,  ரசிகர்களும்  அசௌகரியங்களை எதிர்நோக்கலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக பிரேரிக்கபப்ட்டுள்ள காலப்பகுதியில் போட்டிகளை நடத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்