இலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை – நியூசிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 10:27 pm

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
289 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படும் போது 4.2  ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 13  ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
ஹம்பாந்தோட்டையில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 288 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணிசார்பாக திலகரட்ன டில்சான் 81 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
நியூசிலாந்து அணிசார்பாக கைல் மில்ஸ் மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்டன் டாவின்ஸ்சி மற்றும் மிச்சேல் மெக் க்ளனகன், ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டி நாளை மறுதினம் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்