இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அமெரிக்கா வேண்டுகோள்

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அமெரிக்கா வேண்டுகோள்

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை நடத்த வேண்டும்; அமெரிக்கா வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 8:14 pm

cகெடுப்பு தாமதப்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஸ்திரமற்ற நிலை ஏற்படலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பினை உடனடியாக நடத்த வேண்டுமென மாலைத்தீவுகளின் அதிகாரிகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
மாலைத்தீவுகளின் ஜனாதிபதி தேர்தல் இவ்வாண்டு மூன்றாவது முறையாக நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது,
இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் 47 வீதமான வாக்குகளைப் பெற்றதுடன், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இன்றைய தினம் நடைபெறவிருந்தது.
எனினும் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தேர்தலை தாமதப்படுத்துமாறு  2 ஆம் இடத்தைப் பெற்ற அப்துல்லா யாமீன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை மாலைத்தீவுகளின் உயர் நீதிமன்றம் 6 நாட்களால் தாமதப்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு தயாரித்துள்ள வாக்காளர் பதிவு தொடர்பான சர்ச்சைகள் காரணமாக இதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்திருந்தன.
முதல் முறையாக செம்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் அமைந்ததாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் வாக்காளர் பதவில் போலி மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளாத தெரிவித்து அதன் முடிவினை உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தது.
இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தகுதி பெற்றிருந்ததாக மாலைத்தீவுகளின் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்