இந்தியப் பிரதமர் இலங்கை வரமாட்டார்; உறுதிப்படுத்தினார் குர்ஷித்

இந்தியப் பிரதமர் இலங்கை வரமாட்டார்; உறுதிப்படுத்தினார் குர்ஷித்

இந்தியப் பிரதமர் இலங்கை வரமாட்டார்; உறுதிப்படுத்தினார் குர்ஷித்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 7:10 pm


இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்துகொள்ள மாட்டார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்வதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
உள்ளக அரசியல் அழுத்தங்களை நிராகரித்துள்ள குர்ஷித், இந்த மாநாட்டில் கலாநிதி மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சல்மான்  குர்ஷித் – இந்திய வெளிவிவகார அமைச்சர்;-
பொதுநலவாய மாநாடுகளில் எமது பிரதமர் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகள் கடந்த காலங்களிலும் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில், பிரதமர் நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் ஏனைய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய விடயங்களை கருத்திற்கொண்டு, அவை தொடர்பில் கலந்துரையாடி, தமது திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நேர்கின்றது. கடந்த வருடம் இந்திய உப குடியரசுத் தலைவர் மாநாட்டில் கலந்துகொண்டார். இதற்கு முன்னர் பல தடவைகள் மாநாட்டில் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டார். எதிர்காலத்தில் இலங்கை மற்றும் இந்தியா ஆகியவற்றின் உறவுகளை பாதிக்கும் ஒரு விடயமாக இந்தத் தீர்மானத்தினை கருதவேண்டாம்”.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்