ஆரம்பம் இரண்டு வாரத்தில் 100 கோடி வசூல்

ஆரம்பம் இரண்டு வாரத்தில் 100 கோடி வசூல்

ஆரம்பம் இரண்டு வாரத்தில் 100 கோடி வசூல்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2013 | 6:09 pm

தீபாவளியை முன்னிட்டு ஆரம்பம், ஆல் இன் ஆல் அழகுராஜா, பாண்டிய நாடு ஆகிய படங்கள் களமிறங்கின.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி தீபாவளி வெளியீட்டில் வெற்றிநடை போடுகிறது ஆரம்பம்.
”பெப்பர் சால்ட் லுக்” கில் அஜித் கலக்கியுள்ளதால், அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
படம் வெளியான முதல் வாரத்திலேயே 50 கோடி வசூலித்து சாதனை படைத்த ஆரம்பம், இரண்டாவது வாரத்தில் 100 கோடி வசூலினை தாண்டி சாதனை படைத்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்