சொந்தமாக ஈட்டி இருந்தால் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் – லிவிங்டன்

சொந்தமாக ஈட்டி இருந்தால் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் – லிவிங்டன்

சொந்தமாக ஈட்டி இருந்தால் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் – லிவிங்டன்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2013 | 11:13 am


இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை குழாம் இன்று இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.
இந்தப் போட்டிகளின் ஊடாக வட மாகாணத்துக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்க்க முயற்சிக்கும் ஒரு வீரரின் தகவலை ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பதிவு செய்கிறது.
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவரான டபிள்யூ.சி.எல் லிவிங்டன் வட மாகாணத்திலுள்ள ஆற்றல்மிகு ஈட்டி எறிதல் வீரராவார்.
2010 ஆம் ஆண்டில் ஈட்டி எறிதல் போட்டிகளில் ஈடுபட்ட இவர் அன்று முதல் இன்று வரை பல வெற்றிகளை ஈட்டி வட மாகாணத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சொந்தமாக ஈட்டி இருந்தால் பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என்பது இந்த வீரரின் கருத்தாகும்.
ஈட்டி ஒன்றை கொள்வனவு செய்யக்கூடிய பொருளாதார வளமோ இவருக்கில்லை.
இத்தனை தடைகளையும் தாண்டியே இவர் இம்முறை நடைபெறும் இரண்டாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்கு தகுதிபெற்றுள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகள் மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில் 62 தசம் ஐந்து எட்டு மீற்றர் தூரத்துக்கு ஆற்றலை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் லிவிங்டனுக்கு இந்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்