ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்கா வசம்

ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்கா வசம்

ஒரு நாள் தொடர் தென் ஆபிரிக்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2013 | 3:30 pm

பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை தென் ஆபிரிக்கா கைப்பற்றியுள்ளது.
இந்தத் தொடரில் இன்னுமொரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் தென் ஆபிரிக்கா தொடரை தன்வசப்படுத்தியுள்ளது..
அபுதாபியில் இடம்பெற்ற நான்காவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றது.
267 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
சிறப்பாக பந்து வீசிய டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  தென் ஆபிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.
சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய குவான்டன் டி கொக் 112 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்