முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அமோக வெற்றி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அமோக வெற்றி

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அமோக வெற்றி

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2013 | 8:38 pm

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அமோக வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான இன்று ஒரு இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்டங்களால் இந்தியா வெற்றிபெற்றது.
இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாமல் குறைவான ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
168 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்த மேற்கிந்தியத் தீவுகள் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கட்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 453 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா சார்பில் அறிமுக வீரரான  முஹமட் சமி இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 9 விக்கட்களைக் கைப்பற்றினார்.
இதேவேளை தமது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடும் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்களையே பெற்றார்.
இந்தப் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் மைதானத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்