விண்வெளித்துறையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – மாதவன் நாயர்

விண்வெளித்துறையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – மாதவன் நாயர்

விண்வெளித்துறையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – மாதவன் நாயர்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 1:54 pm

விண்வெளித்துறை தொடர்பில் இந்தியாவை விட சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஜி. மாதவன் நாயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை விட சீனாவின் விண்வெளித்துறை முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னர் சீனாவை விட தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி தொடர்பான ஆய்வுகளில் இந்தியா முன்னிலை வகித்ததாகவும், அந்த நிலை தற்போது மாறியுள்ளது எனவும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி பெருமை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை சீனா ஏற்கனவே புரிந்து விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா ஏவியுள்ள நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டுவருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்