வலி. வடக்கில் குடியிருப்புகள் அழிக்கப்படுவதற்கு எதிராக மு.தம்பிராசா உண்ணாவிரதம்

வலி. வடக்கில் குடியிருப்புகள் அழிக்கப்படுவதற்கு எதிராக மு.தம்பிராசா உண்ணாவிரதம்

வலி. வடக்கில் குடியிருப்புகள் அழிக்கப்படுவதற்கு எதிராக மு.தம்பிராசா உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:09 pm


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் குடியிருப்புகள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முத்தையாப்பிள்ளை தம்பிராசா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
யாழ். கோட்டை பகுதியில் உள்ள முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
வலிகாமம் வடக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் மக்களின் வீடுகளை இடித்தழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்றும், தடுப்புக்காவலில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தம்பிராசா கேட்டுள்ளார்.
தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணும் வகையில் யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை மாலை வரை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை  தொடர்ந்து முன்னெடுப்பதாக  தெரிவித்த முத்தையாப்பிள்ளை தம்பிராசா யாழ். மாவட்ட அரச அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்