வரலாற்றில் இடம் பிடித்தார் ஷர்மா

வரலாற்றில் இடம் பிடித்தார் ஷர்மா

வரலாற்றில் இடம் பிடித்தார் ஷர்மா

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 9:30 pm

கன்னி டெஸ்ட் போட்டியில் சதத்தினைப் பெற்ற 98ஆவது வீரராக ரோஹித் ஷர்மா இன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஷீக்கர் தவான், சுரேஷ் ரெய்னா, விரேந்தர் சேவாக், செளரவ் கங்குலி, மொஹமட் அசாரூதீன், உள்ளிட்ட இந்திய வீரர்களும் இதற்கு முன்னர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
கொல்கத்தாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 127 ஒட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதன் மூலம் ரோஹித் ஷர்மா இந்த மைல்கல்லினை எட்டினார்.
போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்டநேர நிறைவில் 6  விக்கெட் இழப்பிற்கு 354 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.
இதன்பிரகாரம் முதல் இன்னிங்ஸ்சில் மேற்கிந்திய தீவுகள் அணியை விட மேலும் 4 விக்கெட்டுக்கள் கைவசம் இருக்க 120  ஒட்டங்களால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின் ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன் இந்த தொடருடன் ஒய்வுபெறவுள்ள நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டுல்கர் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணிசார்பாக ஷேன் ஷீலிங் பேர்ட் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்