ராஜாங்கனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

ராஜாங்கனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

ராஜாங்கனை பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் தோற்கடிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:46 pm

ராஜாங்கனை பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு-செலவுத்திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டதாக பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் நிஹால் கொடிகார தெரிவித்துள்ளார்.
வரவு-செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக சபையின் தவிசாளர் மாத்திரமே வாக்களித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த வரவு-செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிக்கவில்லை என்பதால், சபை உறுப்பினர்கள் அதுகுறித்து அதிருப்தியடைந்திருந்தனர் என்றும் ராஜாங்கனை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறிய எதிர்கட்சித் தலைவர், தாம் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்