மூன்று ரயில் விபத்துக்கள்; இருவர் பலி, ஒருவர் காயம்

மூன்று ரயில் விபத்துக்கள்; இருவர் பலி, ஒருவர் காயம்

மூன்று ரயில் விபத்துக்கள்; இருவர் பலி, ஒருவர் காயம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:50 pm

வெள்ளவத்தை, கம்பஹா மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளில் இன்று காலை ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மிதிபலகையில் சென்ற 30 வயதான மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மிதிபலகையில் பயணித்த இந்த நபர் கொழும்பிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கண்டி மற்றும் பேராதனைக்கு இடையில் ரயிலில் மோதி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
28 வயதான மெய்வல்லுநர் வீரர் ஒருவரே இந்த ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
பயிற்சிக்காக இன்று காலை மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது முல்கம்பொலயில் பயணிகள் பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனையிலிருந்து பாணந்து​றை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி காயமடைந்த ஒருவர், கம்பஹா ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்