பொலிஸ் உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு இடமாற்றம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு இடமாற்றம்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 12:03 pm

பொலிஸ் திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைப் பிரிவின் 23 உத்தியோகத்தர்களுக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குறித்த பிரிவில் கடமையாற்றியமையால் அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அவர்களுக்குப் பதிலாக மேலும் ஒரு பிரிவினரை பணிக்கு அமர்த்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் திட்டமிட்ட குற்றங்கள் விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் நால்வருக்கும், பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்