பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா?

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா?

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா?

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 10:11 pm


எதிர்வரும் வாரம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்துகொள்கின்றமை குறித்து பல்வேறு தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
2013.03.25
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் அல்லது மாநாட்டை வேறொரு நாட்டில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்ததை அடுத்தே இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவின் பங்கேற்பு குறித்து பிரச்சினைகள் எழுந்தன.
2013.03.24
கொழும்பில் நடைபெறவுள்ள மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கோரி தமிழ்நாட்டு ராஜ்ய சபாவில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.
2013.10.31
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பங்கேற்பதற்கான அனுமதியை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு வழங்கியிருந்தது.
சர்வதேச மட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகள் அவ்வாறே தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றே அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாடு இந்திய – இலங்கை பிரச்சினை என கருத்திற் கொள்ளாது, நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அந்த குழுவின் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
2013.10.31
இந்திய பிரதமர் அந்த மாநாட்டில் கலந்துகொள்வாராயின், அதற்கான பெறுபேற்றை ஆளும் கட்சி அனுபவிக்கும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்திருந்தார்.
இதற்கமைய இந்திய பிரதமர் பொதுநலவாய அரச தலைவர்கள்  மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2013.11.01
கனேடிய பிரதமரை பின்பற்றி தாம், பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க போவதில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இந்த மாத ஆரம்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
2013.11.06
இந்தியா மாநாட்டை புறக்கணிப்பதன் ஊடாக இலங்கையை புறக்கணித்து, அதனூடாக மாநாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக வாக்கை பதிவு செய்ய முடியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2013.11.06
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்,  இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய மக்கள் கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவிக்கின்றார்.
இந்திய காங்கிரஸ் கட்சியின் அபிலாஷைகளை விடவும் இந்தியாவின் தேசிய ரீதியிலான அபிலாஷைகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உயர்ந்த மதிப்பளிப்பதாயின், பொதுநலவாய  மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என இந்திய மக்கள் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாட வேண்டும் எனவும்,  யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டும் எனவும் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சுதர்ஷன நாச்சியப்பன் – இந்திய மத்திய அமைச்சர்;-
”இலங்கையின் சுமார் 1.4 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மலைநாட்டு பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் சென்று, அந்த மக்களை சந்தித்து கலந்துரையாட வேண்டும். பிரதமர், அந்த மக்களை சந்தித்து, பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வாராயின், நாம் எப்போதும் தமிழ் மக்களுடன் இருக்கின்றோம் என்பதனை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்”.
(2013.11.05) மீம் அப்சால் – பேச்சாளர் காங்கிரஸ் கட்சி – இந்தியா;-
”எமது நாட்டில் உள்நாட்டு கொள்கையை போன்றே, வெளிநாட்டு கொள்கைகளும் காணப்படுகின்றன. அதனால் மிகவும் அவதானத்துடனேயே தீர்மானங்களை எடுக்க வேண்டும். தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். அதேபோன்று அரசாங்கம் என்ற விதத்தில் அனைத்தையும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும். மத்திய அரசாங்கம் அனைத்தையும் கவனத்திற் கொண்டே தீர்மானமொன்று எடுக்கப்படும்”.
சபீர் அலி – மக்கள் டால் – ஐக்கிய கட்சி;-
”உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் காணப்பட வேணடும் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடியும். அதனை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுடன் குழப்பிக் கொள்ளாது, பிரதமர் மன்மோகன் சிங், கொழும்பிற்கு செல்ல வேண்டும்”.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்