பூர்வீக காணிகளை பெற்றுத்தர கோரும் வழக்கு; பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பூர்வீக காணிகளை பெற்றுத்தர கோரும் வழக்கு; பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

பூர்வீக காணிகளை பெற்றுத்தர கோரும் வழக்கு; பிரதிவாதிகளை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 5:27 pm

தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, வடபகுதி மக்கள் சிலர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீடு மீதான ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு நீதிமன்றம் இன்று திகதி நிர்ணயித்துள்ளது.
இதற்கமைய, அடுத்தவருடம் ஜனவரி 24 ஆம் திகதி பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வட பகுதியிலுள்ள இரண்டாயிரத்து 176 பேர் மூன்று மேன்முறையீடுகளின் மூலம் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அனில் குணரத்ன மற்றும் மாலனி குணரத்ன ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
யாழ்.மாவட்ட செயலாளர், யாழ். அளவையியல் உத்தியோகத்தர், காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மேன்முறையீடுகளில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்