பூனாகலை பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

பூனாகலை பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

பூனாகலை பஸ் விபத்துடன் தொடர்புடைய சாரதிக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 7:28 pm

பத்து பேரின் உயிர்களை காவுகொண்ட பூனாகலை பஸ் விபத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பஸ் சாரதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்செய்யப்பட்டிருந்தார்.
தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறிய பின்னர் விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சாரதி நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பண்டாரவளை பூனாகல பகுதியில் கடந்த 4 ஆம் திகதி மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 17 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மேலும் சிலரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளையில் இருந்து பூனாகலை நோக்கிப் பயணித்த பஸ், மாபிட்டிய எனுமிடத்தில் சுமார் 350 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்