நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளது – பந்துல முனசிங்க

நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளது – பந்துல முனசிங்க

நிலக்கீழ் நீர் மாசடைந்துள்ளது – பந்துல முனசிங்க

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 1:18 pm


நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நிலக்கீழ் நீர் பெருமளவில் மாசடைந்துள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் பந்துல முனசிங்க குறிப்பிட்டார்.
விவசாய நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறும் பகுதிகளின் நிலக்கீழ் நீர் இவ்வாறு மாசடைந்துள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை குறிப்பிடுகின்றது.
யாழ்ப்பாணம், அம்பாறை, புத்தளம், பதுளை, கம்பஹா, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலை அதிகரித்துக் காணப்படுவதாக அவர் கூறினார்.
நிலக்கீழ் மாசடைவதால், எதிர்வரும் காலங்களில் ஏனைய நீரேந்து பகுதிகளில் காணப்படும் நீரும் மாசடையும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடுமென அவர் தெரிவித்தார்.
நிலக்கீழ் நீர் மாசடைவதை குறைப்பது தொடர்பில் விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக சபையின் தலைவர் பந்துல முனசிங்க குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்