இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை

இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 5:22 pm

இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் இன்று இந்த மீனவர்கள் ஆஜர்செய்யப்பட்டிருந்தனர்.
சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய இந்திய மீனவர்கள் 22 பேரையும் விடுதலை செய்வதுடன், கைப்பற்றப்பட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி வடபகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 22 பேரையும் இலங்கை கடற்படையினர் ஊடாக இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்