அவிசாவளை வாகன விபத்தில் ஒருவர் பலி

அவிசாவளை வாகன விபத்தில் ஒருவர் பலி

அவிசாவளை வாகன விபத்தில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2013 | 1:10 pm

அவிசாவளை, குருகல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தின் பின்னர் லொறியின் சாரதி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
லொறி தற்போது அவிசாவளை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்