வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 7:51 pm

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரச சேவையில் பயிலுனர் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கே இன்று நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.
கடந்த வருடம் பட்டதாரிகள் பயிலுனர் தரத்தில் அரச சேவையில் உள்வாங்கப்பட்ட இவர்கள், பல்வேறு திணைக்களங்களில் இதுவரை காலமும் கடைமையாற்றி வந்தனர்.
இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்