ரணில் தான் விரும்பிய விதத்தில் செயற்படும் உறுப்பினர்களையே நியமித்துள்ளார் – ஷிரால் லக்திலக்க

ரணில் தான் விரும்பிய விதத்தில் செயற்படும் உறுப்பினர்களையே நியமித்துள்ளார் – ஷிரால் லக்திலக்க

ரணில் தான் விரும்பிய விதத்தில் செயற்படும் உறுப்பினர்களையே நியமித்துள்ளார் – ஷிரால் லக்திலக்க

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 9:47 pm

,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து  வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
ரோஹித அபேகுணவர்தன :-
“தலைமைத்துவ சபை தொடர்பில் தற்போது என்ன இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் உள்ளார். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அவரே. சிறகுகளை வெட்டியுள்ளார்களா? அல்லது புதிதாக சிறகுகளை இணைத்துள்ளார்களா? என்பதையே பார்த்துக் கொண்டுள்ளோம்.  தெரிவு செய்யப்படும் ஏழு பேருக்கு இதனை பொறுப்பளித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அந்த ஏழு பேருக்கும் கடவுளின் துணையென்றே கூற வேண்டும்.  அடுத்தாக மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமையை ரணில் விக்ரமசிங்க நன்கு அறிந்துள்ளார்.  அதன்போது கரு ஜயசூரியவின் தலைமையில் இந்த ஏழு பேரையும் நியமித்துள்ளார். அந்த தேர்தல்களின் போது ரணில் விக்ரமசிங்க என்ன கூறுவார்?  தற்போது தலைமைத்துவ சபையை உங்களுக்கு வழங்கியுள்ளேன் முடியுமானால் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றுக் காட்டுமாறு கரு ஜயசூரியவைப் பார்த்தும், ஏனைய எழு பேரையும் பார்த்தும் ரணில் விக்ரமசிங்க கூறுவார்.  எவ்வித சந்தேகமும் இன்றி அந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும். சில்லறையாக அல்ல மொத்தமாக தோல்வியடைவர்.  அதன் பின்னர் தலைமைத்துவ சபையினால் இதனை வெற்றி கொள்ள முடிந்ததா? என ரணில் விக்ரமசிங்க கரு ஜயசூரியவிடம் கேட்பார்”
ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமானவர்களை நியமிப்பதற்கு  இடமளிப்பது என்றால், அது ஒருபோதும் தலைமைத்துவ சபை ஆகாதென தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்த கருத்து :-
“இன்று ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக உள்ளார். அதேபோன்று தேசிய தலைவராகவும் உள்ளார்.  இந்த மூன்று பதவிகள் இருந்தாலும், இந்த நாட்டின் தலைவராக அவரால் மாற முடியாது.  20 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்க்கட்சியாக மாற்றிய தலைவரே அவர். தற்போது தலைமைத்துவ சபை என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர். தேரர்களின் சிபார்சுகளுக்கு எதிராக செயற்படுவதில்லை என கரு ஜயசூரிய தேரர்கள் முன்னிலையில் உறுதி வழங்கினார். அந்த யோசனையின் பிரதி என்னிடம் உள்ளது.  இது கரு ஜயசூரிய கையொப்பமிட்ட ஆவணமாகும். சஜித் பிரேமதாஸவும் இதில் கையொப்பமிட்டார்.  இதில் கையொப்பமிட்ட பின்னர் பதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அதனைக் காட்டிக் கொடுப்பது என்றால் அது ஒருபோதும் தலைமைத்துவ சபையாக மாறாது.  ரணில் விக்ரமசிங்கவிற்கு வேண்டியவர்களை இதில் உள்வாங்குவதற்கு இடமளிப்பதென்றால் அது ஒருபோதும் தலைமைத்துவ சபையாகாது”
ரணில் விக்கிரமசிங்க விரும்பிய விதத்தில் நியமித்துள்ள தலைமைத்துவ சபையை ஏற்றுக்கொள்வதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க கூறினார்.
ஷிரால் தெரிவித்த கருத்து :-
“தற்போது பெயரளவில் தலைமைத்துவ சபையொன்றை அமைத்துள்ளனர்.  இந்த தலைமைத்துவ சபையில் ரணில் விக்ரமசிங்கவின் சகாக்களே அதிகளவில் உள்ளனர். அதன் கீழே கரு ஜயசூரிய செயற்பட வேண்டியுள்ளது.  இந்தக் கட்சியின் வெற்றிக்காக எவ்வித பங்களிப்பையும் வழங்காதவர்களே தலைமைத்துவ சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கு தாக்குல் நடாத்திய மங்கள சமரவீர ஓர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ரணில் விக்ரமசிங்க தான் விரும்பிய விதத்தில் செயற்படும் உறுப்பினர்களையே நியமித்துள்ளார்.  எனவே இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்.  கரு ஜயசூரிய இந்தக் கட்சியை நேசிக்கும் ஒருவராக இருந்தால் தயவு செய்து தேரர்களுக்கு மதிப்பளித்து, அதேபோன்று கட்சி ஆதரவாளர்கள் கூறும் விடயங்களை செவிமடுத்து உரிய முறையில் செயற்பட வேண்டும்.  அனைவரும் கோரிய அனைத்து அதிகாரங்களும் கொண்ட நியாயமான தலைமைத்துவ ச​பையொன்றை உருவாக்கி அதன் ஊடாக செயற்படுமாறு கூறுகின்றோம்”
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று ஸ்தாபித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபை இன்று கூடியது.
ஐக்கிய தலைமைத்துவ சபை கரு ஜயசூரிய தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில்  கூடியது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையில் 9 பேர் உறுப்பினர்களாக இருந்தபோதிலும், இன்றைய சந்திப்பில் 6 பேர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்