மோட்டார் சைக்கில் ரயிலுடன் மோதியதில் இருவர் பலி

மோட்டார் சைக்கில் ரயிலுடன் மோதியதில் இருவர் பலி

மோட்டார் சைக்கில் ரயிலுடன் மோதியதில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 10:21 am


பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு 9.20 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலுடனேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
மற்றைய நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
களனி தொரண சந்தியைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்த மற்றைய நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்