மன்மோகன் சிங் தேச நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் – சுதர்சன நாச்சியப்பன்

மன்மோகன் சிங் தேச நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் – சுதர்சன நாச்சியப்பன்

மன்மோகன் சிங் தேச நலனைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்க வேண்டும் – சுதர்சன நாச்சியப்பன்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 8:02 am

தேச நலனைக் கருத்திற்கொண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்கான தமது இலங்கைப் பயணம் குறித்து இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் முடிவெடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய ஊடகமொன்றிற்கு மத்திய வர்த்தக இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ள கருத்தினை மேற்கோள்காட்டி தஹிந்து தகவல் வெளியிட்டுள்ளது.
தேச, மாநிலம் மற்றும் அண்டைநாட்டுடனான உறவு ஆகியவற்றைக் கருதிற்கொண்டு பிரதமர் மன்மோஹன் சிங் முடிவெடுக்க வேண்டும் என்றும் நாசியப்பன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களை கருத்திற்கொண்டு, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் இந்திய பிரதமரின் முடிவு அமையவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்