மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 8:05 pm

வெலிகமவில் மண்வெட்டியால் தாக்கி ஒருவரை கொலை செய்தவருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன டி சில்வா முன்னிலையில், பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி வெலிகம பகுதியில் 32 வயதான ஒருவரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, தனது மாமனாரை தாக்கி கொலைசெய்தவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன டி சில்வா முன்னிலையில், சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி பக்கமுன பகுதியில் 83 வயதானவரை தாக்கி கொலை செய்தமை தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்