மங்கள்யான் செயற்கை கோளை விண்ணுக்கு ஏவும் நடவடிக்கைகள் நிறைவு

மங்கள்யான் செயற்கை கோளை விண்ணுக்கு ஏவும் நடவடிக்கைகள் நிறைவு

மங்கள்யான் செயற்கை கோளை விண்ணுக்கு ஏவும் நடவடிக்கைகள் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 12:51 pm

செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் செயற்கைகோளை  ஏவுவதற்கான தயார்படுத்தல் பணிகள் நிறைவுபெற்றுள்ளதாக இந்தியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீகரிகோட்டாவிலுள்ள சதிஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
செவ்வாய் கிரகத்தின் ஒழுக்கு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் இந்த செயற்கைகோளில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்படும் பட்சத்தில் 300 நாட்கள் பயணம் மேற்கொண்டு, 2014 ஆம் ஆண்டு செம்டெம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தின் ஒழுக்கினை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோளை அனுப்பும் முதலாவது தெற்காசிய நாடாகவும் இந்திய பதிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்