பொதுநலவாய மாநாடு; இலங்கை தெரிவுசெய்யப்பட்டதை கமலேஷ் ஷர்மா நியாயப்படுத்தியுள்ளார்

பொதுநலவாய மாநாடு; இலங்கை தெரிவுசெய்யப்பட்டதை கமலேஷ் ஷர்மா நியாயப்படுத்தியுள்ளார்

பொதுநலவாய மாநாடு; இலங்கை தெரிவுசெய்யப்பட்டதை கமலேஷ் ஷர்மா நியாயப்படுத்தியுள்ளார்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 3:51 pm

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான இடமாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டதை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா நியாயப்படுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை பொருத்தமற்ற நாடு என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்
இந்த நிலையில் பொதுநலவாய அமைப்பின் பலம் என்பது பங்கேற்பின் மூலமே உறுதிப்படுத்தப்படுவதாக  பி.பிசிக்கு வழங்கி ​செவ்வியில் கமலேஷ் ஷர்மா, குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொதுநலவாய மாநாட்டை நடத்துவதன் மூலம் இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு ஏதுவாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்