பண்டாரவளை பஸ் விபத்து; 6 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பண்டாரவளை பஸ் விபத்து; 6 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பண்டாரவளை பஸ் விபத்து; 6 பேரின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 8:19 pm

பண்டாரவளை, பூணாகல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில், 06 பேரின் சடலங்கள் இதுவரையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பூணாகல வீதியின் ஒன்பதாம் மைல் கல் பகுதியில் மாபிடி பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன், 18 பேர் படுகாயமடைந்தனர்.
பண்டாரவளையில் இருந்து பூணாகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
காயமடைந்தவர்களின் 11 பேர் தியத்தலாவை ஆதார வைத்தயசாலையிலும், 07 பேர் பதுளை பொது வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் பூணாகலயைச் சேர்ந்த 54 வயதான சின்னம்மாள், மல்வான பிரிவு மாகந்தையைச் சேர்ந்த 26 வயதான சபாபதி சத்தியராஜ் என்ற இளைஞரும் அடங்குகின்றனர்.
பண்டாரவளை மாபிடிய பகுதியைச் சேர்ந்த 33 வயதான நிர்மலா முத்துசாமி, பண்டாரவளை அம்பேதன்னகமவைச் சேர்ந்த 43 வயதான சமந்த ரத்னாயக்க, காலிமுத்துமலையை சேர்ந்த 65 வயதான சோமசுந்தரம் வள்ளியம்மா, பூணாகலை முதலாம் பிரிவைச் சேர்ந்த 37 வயதான ரவிச்சந்திரன் பெருமன் என்பவரும் அடங்குகின்றனர்.
பூணாகலை முதலாம் பிரிவைச் சேர்ந்த 58 வயதான ஆர்.டீ. பியசேன என்பவரும், ஹாலிஎல மொரகல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதான சத்தியசீலன் பழனியாண்டி என்பவரும் ஆகியோரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பண்டாரவளை டிப்போவினால் இன்று இழப்பீடு வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்