பண்டாரவளை பஸ் விபத்து; 10 பேர் பலி, 18 பேர் காயம்

பண்டாரவளை பஸ் விபத்து; 10 பேர் பலி, 18 பேர் காயம்

பண்டாரவளை பஸ் விபத்து; 10 பேர் பலி, 18 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 9:54 am

,
பண்டாரவளை, புனாகலை, மாபிடிய பகுதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
காயமடைந்தவர்களில் 11 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11 பேர் தியத்தலாவ வைத்தியசாலையிலும், 7 பேர் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பூனாகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே சமார் 350 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
பண்டாரவளையில் இருந்து நேற்று மாலை 6 மணியளவில் இந்த பஸ் நேற்றைய தினம் பணயத்தை ஆரம்பித்திருந்தது.
பஸ் சாரதியின் கவயீனமே விபத்திற்கு காரணம் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பண்டாரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்