நெல்லை அரிசியாக்கி மீண்டும் ஒப்படைக்காத ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

நெல்லை அரிசியாக்கி மீண்டும் ஒப்படைக்காத ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

நெல்லை அரிசியாக்கி மீண்டும் ஒப்படைக்காத ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 10:33 am


நெல்லை அரிசியாக்கி மீண்டும் ஒப்படைக்காத 60க்கும் அதிகமான ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபை தெரிவிக்கின்றது.
மூடப்படும் தருவாயில் இருந்த ஆலைகளின் உரிமையாளர்களை மீள  வலுப்படுத்தும் நோக்கிலேயே அவர்களுக்கு நெல் விநியோகிக்கப்பட்டதாக சபையின் தலைவர் கே.பீ. ஜயசிங்க கூறுகின்றார்.
 
நூற்றுக்கும் அதிகமான ஆலை உரிமையாளர்களுக்கு நெல் விநியோகிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
எவ்வாறாயினும், 40க்கும் குறைவானவர்களே நெல்லை அரிசியாக்கி மீள ஒப்படைத்துள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எனவே, அரிசியை வழங்காத ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இம்முறை போகத்தில் 97 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெற்சந்தைப்படுத்தல் சபை சுட்டிக்காட்டுகின்றது.
அடுத்த போகத்திற்கான நெல் கொள்வனவு தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கே.பீ. ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்