சிறந்த உலக மெய்வல்லுநர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் மூ பரா

சிறந்த உலக மெய்வல்லுநர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் மூ பரா

சிறந்த உலக மெய்வல்லுநர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் மூ பரா

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 1:03 pm

இவ்வாண்டிற்கான சிறந்த உலக மெய்வல்லுநர் விருதுக்கான 3 வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலில் பிரித்தானியாவின் மூ பராவும் இடம்பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும், உலக சாம்பியன் ஷிப் போட்டிகளில்  இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்ற  இரண்டாவது வீரராக அவர் வராற்றில் இடம்பிடித்திருந்தார்.
சர்வதேச மெய்வல்லுநர் சம்மேளனங்களின் சங்கம் இந்த விருதுக்கான வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த இறுதிப் பட்டியலில் அதிவேக ஒட்டவீரர் உசைய்ன் போல்ட் மற்றும் உக்ரைய்னின் உயரம் பாயும் வீரர் பொஹ்டன் பொண்டாரிங்கோ ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 16 ஆம் திகதி மெனாக்கோவில் நடைபெறவுள்ள நிகழ்வில் விருதுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்