சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளியேற்றம்

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளியேற்றம்

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளியேற்றம்

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 1:13 pm

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக பங்களாதேஷ், இந்தியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் யேமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இதில் அதிகளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக் காலப் பகுதியிலேயே இவர்கள்  நாடு திரும்பியுள்ளனர்.
பொதுமன்னிப்புக்காலம் நேற்றுமுன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில் சுமார் நான்கு மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணி அனுமதிப் பத்திரத்தை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ந்தும் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் சவுதி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்கீழ் 3 ஆயிரம் இந்தோனேஷியப் பணியாளர்கள் ஜெட்டாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
சுமார் 9 மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெறும் ATP Tour Finals டென்னிஸ் தொடரின் தமது முதல் போட்டியில் ஆஜென்ரினாவின் ஜுவன் மார்ட்டின் டெல் போற்றோ  வெற்றிபெற்றுள்ளார்.
பி குழுவில் பிரான்ஸ்சின் ரிஸ்சட் கெஸ்கேக்கு எதிரான போட்டியில் இரண்டுக்கு ஒன்று என்ற செட் கணக்கில் ஜுவன் மார்ட்டின் டெல் போற்றோ வெற்றியீட்டினார்.
இந்த நிலையில் குழுவிலுள்ள நொவெக் ஜோக்கோவிச் மற்றும் ரொஜர் பெடரர் ஆகியோரை வெற்றிகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேகுழுவிற்கான மற்றுமொரு போட்டியில் நொவெக் ஜோக்கோவிச் மற்றும் ரொஜர் பெடரர் ஆகியோர் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்