சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் கைது

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் கைது

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 1:20 pm

பொதுமன்னிப்புக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை எஜமானர்களை தேடிக்கொள்ள முடியாமல்போன 2 இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசா காலாவதியான வெளிநாட்டு  பணியாளர்களுக்காக  வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் சவூதி அரேபியாவின் மேற்கு பகுதியில் வைத்து இந்த இலங்கைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொதுமன்னிப்பு காலம் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில், சுமார் 1200 இலங்கையர்களால்  தமக்கான ஏஜமானர் ஒருவரை இதுவரை தேடிக்கொள்ள முடியாமல்  போயுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் அலுவலக தொழில் உறவுகளுக்கான  முதல் செயலாளர் எம்.பி.எம். சரூக் பி.பி.சி செய்தி சேவைக்கு கூறியுள்ளார்.
அவர்களுள் 50 க்கும் அதிகமானவர்கள் இலங்கை கொன்சுலர் நாயகம் அலுவலகத்தின் தடுப்பு முகாமில் தங்கியுள்ளனர்.
இவர்களில் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், அவர்களுக்கு தமது வீடுகளில் தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஏஜமானர்கள் இன்றி  தங்கியுள்ளவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக, சவூதி அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ஜித்தா நகரிலுள்ள இலங்கை கொன்சுலர் நாயகம் அலுவலகத்தின் தொழில் உறவுகளுக்கான முதல் செயலாளர் எம்.பி.எம். சரூக் பீ.பீ.சீ. க்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொது மன்னிப்புக்கு உட்படாத மேலும் 300 இலங்கைப் பணியாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பீ.பீ.சீ. செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்