சட்டவிரோதமாக ஹெரோயின் கடத்த முயன்ற லைபீரிய பிரஜை கைது

சட்டவிரோதமாக ஹெரோயின் கடத்த முயன்ற லைபீரிய பிரஜை கைது

சட்டவிரோதமாக ஹெரோயின் கடத்த முயன்ற லைபீரிய பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 7:37 pm

சுமார் 20 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி செல்ல முற்பட்ட லைபீரிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள்களை உகண்டாவிற்கு கடத்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், பணிப்பாளருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.
சுமார் 30 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தமது பயணப் பொதியில் சூட்சுமமாக மறைத்துவைத்து கடத்துவதற்கு முற்பட்ட போது சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்