கனகராயன்குளம் விபத்தில் இராணுவ வீரர் பலி

கனகராயன்குளம் விபத்தில் இராணுவ வீரர் பலி

கனகராயன்குளம் விபத்தில் இராணுவ வீரர் பலி

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 5:51 pm

கனகராயன்குளம் பகுதியில் இராணுவ கெப் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் நான்கு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இராணுவ கெப், கனகராயன் குளம், 219 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனைய இராணுவ வீரர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிடுகின்றது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்