ஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – தலதா அத்துகோரள

ஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – தலதா அத்துகோரள

ஐ.தே.க தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை – தலதா அத்துகோரள

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 2:43 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் உறுப்புரிமையை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவிக்கின்றார்.
கட்சியின் பெரும்பாலானவர்கள் எதிர்ப்பார்த்த வகையிலான, தலைமைத்துவ சபையொன்று நிறுவப்படாமையால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பதவிகளை எதிர்ப்பார்த்து தாம் செயற்படுவதில்லை எனவும், கட்சியினதும், கிராமிய மட்டத்திலுள்ள கட்சி ஆதரவாளர்களினதும் வெற்றியை நோக்காகக் கொண்டே தாம் எப்பொழுதும் செயற்பட்டு வருவதாகவும் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
தம்மால் எதிர்ப்பார்க்கப்பட்ட தலைமைத்துவ சபை நிறுவப்படவில்லை என்றும், அந்த சபை குறித்து கட்சி யாப்பில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமைத்துவ சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு முன்னதாக, கட்சி சம்மேளனத்தை நடத்தி யாப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் அறிந்த வகையில் பிக்குகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் தலைவரால், தலைமைத்துவ சபைக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட வேண்டும் என்ற நடைமுறை காணப்பட்டதாகவும் , எனினும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை எனவும் தலதா அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்