இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

இந்திய மீனவர்கள் 37 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Nov, 2013 | 4:17 pm


நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 30 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏழு மீன்பிடி படகுகளுடன் இந்த மீனவர்களை நேற்றிரவு கைது செய்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர் இந்திய மீனவர்களை கடற்றொழில் திணைக்கள பணிப்பாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்