ஸ்நோவ்டனுக்கு கருணை காட்டுமாறு முன்வைத்த யோசனை நிராகரிப்பு

ஸ்நோவ்டனுக்கு கருணை காட்டுமாறு முன்வைத்த யோசனை நிராகரிப்பு

ஸ்நோவ்டனுக்கு கருணை காட்டுமாறு முன்வைத்த யோசனை நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 4:13 pm

அமெரிக்காவின் இரகசியங்களை கசியவிட்ட எட்வோர்ட் ஸ்நோவ்டனுக்கு கருணை காட்டுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை சிரேஷ்ட அமெரிக்க சட்டவல்லுநர்கள் நிராகரித்துள்ளனர்
அமெரிக்காவின் சட்டங்களை ஸ்நோவ்டன் மீறியுள்ளதால், நாட்டிற்கு கட்டாயம் கொண்டுவரப்பட்டு நீதி விசாரணைகளை எதிர்கொள்ள வெண்டுமென வெள்ளைமாளிகையின் ஆலோசகர் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பனரிடம் கையளித்த கடிதமொன்றில் அமெரிக்காவில் தம் மீது சுமத்தப்பட்டுள்ள உளவுக் குற்றச்சாட்டுக்களை கைவிட சர்வதேச நாடுகளின் உதவியை ஸ்நோவ்டன் கோரியுள்ளார்.
அமெரிக்காவின் உளவுத் தகவல்களை கசிய விட்டத்தை தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள ஸ்நோவ்டனுக்கு அங்கு தற்காலிக தங்கமிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மொஸ்கோவில் கடந்த வாரம் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்த ஸ்நோவ்டன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உண்மையைக் கூறுவது குற்றமாக அமையாது என ஸ்நோவ்டன் கூறியுள்ளதுடன், உளவுக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தம்மை முறையற்ற விதத்தில் அமெரிக்க அரசாங்கம் நடத்துவதாக குற்றச்சாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்