விசேட தேவையுடையவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

விசேட தேவையுடையவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 10:10 am

விசேட தேவையுடையவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கும் செயற்றிட்டமொன்றை முன்னெடுப்பதற்கு சமூக சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள 05 தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல குறிப்பிட்டார்.
இலவசமாக நடத்தப்படும் இந்த தொழிற்பயிற்சிகளுக்கு 16 தொடக்கம் 35 வயதான விசேட தேவையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.
03 மாதங்கள் தொடக்கும் 2 வருடங்கள் வரையிலான காலப் பகுதியைக் கொண்டதாக இந்த பயிற்சிகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி நடவடிக்கைகளுக்கு தற்போது விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறானவர்கள் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஊடாக விண்ணப்பிக்க முடியுமென அனுஷா கோகுல குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 0112 18 70 40 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ள முடியுமெனவும் திணைக்களம் மேலும் தெரிவித்தது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்