வட மாகாணத்தில் பஸ் கட்டணம் அதிகரிப்பு

வட மாகாணத்தில் பஸ் கட்டணம் அதிகரிப்பு

வட மாகாணத்தில் பஸ் கட்டணம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 2:12 pm


வட மாகாணத்தில்,  போக்குவரத்து அமைச்சினால் முன்மொழியப்பட்டிருந்த 7 வீத பஸ் கட்டண அதிகரிப்பு இன்றுமுதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பஸ் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டபோதிலும், நேற்று வரை வட மாகாணத்தில் மாத்திரம் இந்த பஸ் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவில்லை.
ஆயினும் பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நலன்கருதி 7 வீத பஸ் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்த வட மாகாண போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
வட மாகாண பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனீஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்