வடகொரியாவின் அணுத் திறனை கட்டுப்படுத்துவது தொடர்பில் சிக்கல்

வடகொரியாவின் அணுத் திறனை கட்டுப்படுத்துவது தொடர்பில் சிக்கல்

வடகொரியாவின் அணுத் திறனை கட்டுப்படுத்துவது தொடர்பில் சிக்கல்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 4:33 pm

பிராந்தியத்தில் வளர்ந்து வடகொரியாவின் அணுத் திறனை தடுப்பதில் இக்கட்டினை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜப்பானுடன் பாரிய பிளவு  உள்ளதை  தென்கொரிய ஜனாதிபதி பார்க் குவான் ஹீ சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு கோராதவிடத்தில் ஜப்பான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தவொரு அர்த்தமுல் இல்லை என அவர்  கூறியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் மூன்றாவது அணுச் சோதனையை வடகொரியா மேற்கொண்டதை அடுத்து, பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்த கவலைகள் கடந்த ஆண்டு முதல் அதிகரித்துள்ளன.
வடகொரியாவின் தீய செயற்பாடுகளை உடைப்பதற்கு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென்கொரிய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியாவின் ஆத்தரமூட்டும் இராணுவ செயற்பாடுகளுக்கு  உறுதியான மற்றும் விடா முயற்சியுள்ள பதிலளிக்கும் நடவடிக்கைகளை தமது நாடு மேற்கொள்ளும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாரம் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் பி பி சிக்கு வழங்கிய செவ்வியில் தென்கொரிய ஜனாதிபதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்