ரவீந்திர ஜடேஜாவிற்கு அபராதம்

ரவீந்திர ஜடேஜாவிற்கு அபராதம்

ரவீந்திர ஜடேஜாவிற்கு அபராதம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 5:17 pm

இந்திய அணியின் சகல துறைவீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஷேன் வொட்சனுக்கு எதிராக முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியமைக்காக போட்டிக் கட்டணத்தில் 10 வீத அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெங்களூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 7 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் ஷோன் வொட்சனின் ஆட்டமிழப்பின் பின்னர், ஜடேஜா இவ்வாறு செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
384 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிசார்பாக 22 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 49 ஓட்டங்களை ஷேன் வொட்சன் பெற்றிருந்தார்.
எனினும் இந்தப் போட்டியில் 57 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, 3- 2 என்ற ஆட்டக்கணக்கில் தொடரைக் கைப்பற்றியிருந்தது.
தமது செயற்பாட்டிற்காக ஜடேஜா மன்னிப்புக் கோரியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் அன்டி பைய்குரப்ட் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்