முர்சி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முர்சி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முர்சி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:45 pm

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சி மீதான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி எட்டாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் ஏற்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் வழக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
முஹமட் முர்சி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இதேவேளை தாம் இன்னும் ஜனாதிபதியாகவே இருப்பதாகவும், வழக்கு விசாரணைகள் செல்லுபடியாகாது என்று முர்சி கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை அடுத்து முஹமட் முர்சி மற்றும் முஸ்லிம் சகோரத்துவக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
எகிப்தில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் அரசியல் நெருக்கடிகள் தொடர்கின்றன.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்