மாங்குளம் – மல்லாவி வீதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மாங்குளம் – மல்லாவி வீதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மாங்குளம் – மல்லாவி வீதியில் கஞ்சாவுடன் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 10:43 am

மாங்குளம் – மல்லாவி வீதியில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவரிடம் 7 நாட்கள் தடுத்துவைக்கும் உத்தரவிற்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்தேகநபரிடம் இருந்து 5 கிலோ 150 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார் விசேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, மன்னாரில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவர் எதிர்வரும் 06 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கைதான  சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 560 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்