மட்டக்களப்பு, சத்துருகொண்டான் பகுதியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் பகுதியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் பகுதியில் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 1:52 pm

மட்டக்களப்பு, சத்துருகொண்டான் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக நேற்றிரவு வெளியே சென்ற ஒருவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் வாகன விபத்தொன்றில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்